MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதல் திருமணம் செய்த 10 நாளில் பிரிந்த மனைவி! புதுமாப்பிள்ளை கொடூர கொலை! நடந்தது என்ன? வெளியாக பகீர் தகவல்.!

காதல் திருமணம் செய்த 10 நாளில் பிரிந்த மனைவி! புதுமாப்பிள்ளை கொடூர கொலை! நடந்தது என்ன? வெளியாக பகீர் தகவல்.!

சேலம் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகில், பெருமாள் கோயில் பகுதியில் உள்ள முட்புதரில் முபாரக் (22) முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 27 2024, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Salem Murder

Salem Murder

சேலம் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகில், பெருமாள் கோயில் பகுதியில் உள்ள முட்புதரில் முபாரக் (22) முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முபாரக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Love Marriage

Love Marriage

இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில்: முபாரக் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை செய்த லைன்மேட்டை சேர்ந்த அக்பர் அலியின் மகள் ஷாஜினியை (21) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 10 நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷஜினாபானு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

35
Private video

Private video

அப்போது முபாரக் தனது மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக ஷாஜினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மிரட்டியுள்ளார். இதனையடுத்து சதாதானம் பேச வருமாறு முபராக்கை அழைத்தும் அவர் செல்லவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் முபாரக் ஆம்பூருக்கு ரயிலில் சென்றுவிட்டு மீண்டும் சேலத்துக்கு வந்துக்கொண்டிருப்பதை அறிந்த ஷாஜினியின் உறவினர்கள் பையாஸ், அவரது நண்பர்கள் மற்றொரு முபாரக் யாசின் ஆகிய 3 பேரும் முபாரக்கை இருசக்கர வாகனத்தில் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகே அழைத்து கொண்டு வந்து பேசியுள்ளனர்.

45
Salem Crime News

Salem Crime News

 அப்போதும் முபாரக் ஷாஜினியின் அந்தரங்க படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அப்படினா சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ,2 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் முபாரக்கை கழுத்தை அறுத்தும், முகத்தை சிதைத்தும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

55
Police Arrest

Police Arrest

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என  விசாரணை நடைபெற்று வருகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved