லியோ இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டதால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா?
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
vijay
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவை முதலில் மதுரையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாடு போல நடத்த பிளான் போட்டனர். ஆனால் அந்த பிளான் ஒர்க் அவுட் ஆகாததால், பின்னர் மலேசியா அல்லது துபாயில் நடத்தும் முடிவுக்கு வந்தது படக்குழு.
thalapathy vijay
ஆனால் அங்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, வேறுவழியின்றி சென்னையிலேயே நடத்திவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தன. இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ந் தேதி லியோ ஆடியோ லாஞ்சை நடத்த திட்டமிட்ட படக்குழு, அதற்கான வேலைகளிலும் இறங்கியது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான செட் அமைக்கும் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
leo movie poster
இந்த நிலையில் தான் நேற்று இரவு விஜய் ரசிகர்களுக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்தது. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழுவே அறிவித்தது. லியோ ஆடியோ லாஞ்சுக்கான பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்தே படக்குழு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ரசிகர்களின் நலன் கருதியே இந்த போல்டான முடிவை படக்குழு எடுத்திருந்தது.
Leo Audio launch cancelled
லியோ ஆடியோ லாஞ்ச் ரத்தானது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதற்காக கோடிக்கணக்கில் செய்த செலவுகள் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. லியோ ஆடியோ லாஞ்சுக்காக நடிகர்களிடம் வீடியோ பைட்ஸ் எடுப்பது உள்ளிட்ட வேலைகள் எல்லாம் முடிந்து செட் அமைப்பது மற்றும் அரங்கத்தை தயார் செய்வது என இதற்காக மட்டும் சுமார் 2 கோடி வரை செல்வழித்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆடியோ லாஞ்ச் ரத்தானதால் இவை அனைத்தும் நஷ்டமாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... லியோ ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் காரணமா? பின்னணியில் நடந்த மிகப்பெரிய சூழ்ச்சி என்ன?