பருத்திவீரன் பஞ்சாயத்துக்கு மத்தியில் நடிகர் சூர்யாவின் படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த அமீர்
பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நடிகர் சூர்யா படத்தில் இணைந்துள்ளதை அமீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Director Ameer
அமீர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் பருத்திவீரன். இப்படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். பருத்திவீரன் படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு தேசிய விருதும் வென்றிருந்தாலும், இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே நடந்த மோதல் இன்றளவும் நீடித்து வருகிறது.
actor surya and director ameer
சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஞானவேல் ராஜா, இந்த படத்தை சூர்யா தான் தன் சொந்த செலவில் ரிலீஸ் செய்ததாக சொல்ல, இதற்கு அமீர் மறுப்பு தெரிவித்தார். இப்படத்தை அமீர் தன் சொந்த செலவில் எடுத்ததாக கூறி சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் சப்போர்ட்டுக்கு நின்றனர். அதுமட்டுமின்றி சுதா கொங்கரா, நடிகர் பொன்வண்ணன், கவிஞர் சினேகன் ஆகியோரும் அமீருக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ameer, vetrimaaran
இப்படி பருத்திவீரன் பட பிரச்சனை மீண்டும் பெரிதாகி வருவதால், இயக்குனர் அமீர், நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளதாக வதந்தி பரவி வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமீர் வாடிவாசல் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் வெற்றிமாறன். அதோடு வாடிவாசல் படத்தின் கதையை அமீரிடம் சொன்னபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் வெற்றிமாறன்.
vaadivaasal
வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இப்படத்திற்காக நடிகர் சூர்யா பிரத்யேக பயிற்சியும் பெற்று வருகிறார். வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கை முடித்த பின்னர் வாடிவாசல் படத்திற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மஞ்சள் நிற சேலையில்... மல்கோவா மாம்பழம் போல் தித்திக்கும் சிரிப்பால் மனதை மயக்கிய அனிமல் நாயகி ராஷ்மிகா மந்தனா