- Home
- Gallery
- Parenting Tips : கோடையில் உங்கள் குழந்தைகள் சாப்பிடவே மாட்டேங்குதா..? அப்ப முதல்ல இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!
Parenting Tips : கோடையில் உங்கள் குழந்தைகள் சாப்பிடவே மாட்டேங்குதா..? அப்ப முதல்ல இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி பசியின்மை ஏற்படும். ஆனால், சில சிறப்பு குறிப்புகள் முலம் குழந்தைகளின் பசியை அதிகரிக்க செய்யலாம்..

கோடையில் குழந்தைகளின் பசி குறைந்துள்ளதா? இந்த நிபுணர் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் கோடைக்காலத்தில் குழந்தைகளின் பசியின்மை அடிக்கடி குறைந்து, சரியாக சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்திவிடும். அத்தகைய சூழ்நிலையில், நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் சில சிறப்பு குறிப்புகள் குழந்தைகளின் பசியை அதிகரிக்க உதவும்.
திரவம் கொடுங்கள்: இந்த பருவத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களை வழங்கவும், பசியை அதிகரிக்கவும் இது ஒரு நல்ல வழி என்றே சொல்லலாம். இதற்கு, மில்க் ஷேக், காய்கறி மற்றும் பழச்சாறு, பெருஞ்சீரகம் சாறு இது போன்றவை குழந்தைகளின் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் அதிகரிக்கும்.
காலை உணவு அவசியம்: காலை உணவாக புரதச்சத்து நிறைந்த உணவை குழந்தைகளுக்கு கொடுங்கள். காலை உணவைத் தவிர்ப்பது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, வளர்சிதை மாற்றமும் குறையும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது மற்றும் பசியும் எடுக்காது. எனவே, கஞ்சி, பச்சைக் காய்கறிகள் என இது போன்ற ஆரோக்கியமானதை காலை உணவாக, குழந்தைகளுக்கு கொடுங்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே..10 வயசுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 'இந்த' மாதிரி உணவுகளை கொடுக்காதீங்க!
இவற்றை சாப்பிட கொடுக்காதீர்கள்: பொதுவாக, குழந்தைகள் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை தான் அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இவற்றை சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடுவதால், உணவு சாப்பிட முடியாமல் போகும். எனவே, இந்த தின்பண்டங்களிலிருந்து குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள். விலக்கி வையுங்கள்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கிறார்கள் என்று கவலையா..? இந்த சூப்பர்ஃபுட்களைக் கொடுங்க...
இரண்டு மணி நேரத்திற்கு உணவு: குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் உணவைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிட கொடுங்கள். இதனால் அவர்கள் வயிறு நிரம்பும். உணவும் எளிதில் ஜீரணமாகும். குறிப்பாக, அவர்களுக்கு பசியும் படிப்படியாக அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D