திரையரங்கில் கூட்டமில்லை... ரிலீசான ஒரே வாரத்தில் ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பப்பட்ட ஜப்பான் - எப்போ ரிலீஸ்?
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Japan movie
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வருபவர் கார்த்தி. இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும். இவரின் கதை தேர்வுவை சூர்யாவே வியந்து பாராட்டி இருக்கிறார். அப்படி ஒரு தரமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் கார்த்தி. கடந்தாண்டு கூட இவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் தீபாவளிக்கு வந்த சர்தார் ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன.
japan karthi
இதையடுத்து 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் கார்த்தி நடிப்பில் ஒரே ஒரு படம் தான் ரிலீஸ் ஆனது. அது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். இப்படமும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதையடுத்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஜப்பான் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த கார்த்தி, அப்படத்திற்காக பம்பரம் போல் சுழன்று புரமோஷன்களையும் செய்து வந்தார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது.
japan movie
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. சொதப்பலான திரைக்கதையால் முதல் நாளே தியேட்டரில் காத்துவாங்க தொடங்கியது ஜப்பான். தீபாவளி விடுமுறை நாட்களில் மட்டும் ஓரளவு வசூல் ஈட்டிய இப்படம் நேற்று முதல் கூட்டமின்றி திண்டாடத்தொடங்கியது. பல ஊர்களில் இப்படத்தை தூக்கிவிட்டு லியோ, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Japan OTT Update
நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக ஜப்பான் இருக்கும் என கூறப்படுகிறது. ரிலீஸ் ஆகி ஒருவாரம் கூட ஆகாத நிலையில், ஜப்பான் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை குறைந்து வருவதால் இப்படத்தை விரைவில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஜப்பான் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
japan OTT release
ரிலீசுக்கு முன்னர் வரை இப்படத்தை டிசம்பர் மாத இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிடும் ஐடியாவில் இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், தற்போது ரிலீசுக்கு பின் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தை டிசம்பர் முதல் வாரத்திலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... புரோமோ பொறுக்கினு திட்டிய தினேஷ்... அடிதடியில் இறங்கிய விஷ்ணு - கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு