MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விக்னேஷ் சிவனை UnFollow செய்த நயன்தாரா... இன்ஸ்டாவில் புயலைக் கிளப்பிய லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் பதிவு

விக்னேஷ் சிவனை UnFollow செய்த நயன்தாரா... இன்ஸ்டாவில் புயலைக் கிளப்பிய லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் பதிவு

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை திடீரென இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளது இணையத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2024, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vignesh Shivan, Nayanthara

Vignesh Shivan, Nayanthara

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர். இந்த ஜோடிக்கு உலக், உயிர் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான நான்கே மாதத்தில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

24
nayanthara Husband Vignesh Shivan

nayanthara Husband Vignesh Shivan

வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, ஜவான் படம் மூலம் பான் இந்தியா நடிகையாக உயர்ந்துவிட்டார். அவர் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அப்படத்துக்கு பின் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் கவுதம் மேனன் படத்துக்கே தண்ணிகாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்... நேற்று ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா?

34
nayanthara Unfollow Vignesh Shivan

nayanthara Unfollow Vignesh Shivan

சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, கடந்தாண்டு இன்ஸ்டாகிராமில் நுழைந்தார். அதில் அவர் சேர்ந்த சில நாட்களில் 1 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்கள் அவரை பின் தொடர்ந்தனர். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடத்தி வரும் 9ஸ்கின், பெமி9 போன்ற பிசினஸ்களுக்கான புரமோஷன்களை செய்வது, தன்னுடைய செல்ல மகன்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிடுவது என ஆக்டிவாக இருந்து வந்தார் நயன்தாரா.

44
nayanthara insta Story

nayanthara insta Story

சில சமயங்களில் தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் கொலேப் செய்தும் சில பதிவுகளை பதிவிடுவார். இந்த நிலையில், தற்போது திடீரென தன்னுடைய கணவரை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் நயன்தாரா. மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ஷேர் செய்துள்ள பதிவில், “எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்கிற கேப்ஷனும் இடம்பெற்று உள்ளது. இதனால் விக்கி நயனும் சண்டைபோட்டுவிட்டார்களா என்கிற பேச்சு எழத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஏழைகளுக்கு இலவச சிகிச்சை... 12 ஏக்கரில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்..? எந்த ஊரில் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved