MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏழைகளுக்கு இலவச சிகிச்சை... 12 ஏக்கரில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்..? எந்த ஊரில் தெரியுமா?

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை... 12 ஏக்கரில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்..? எந்த ஊரில் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கரில் மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2024, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது ஐதராபாத்தில் வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் ரஜினிகாந்த், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர்.

24

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திருப்போரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவர் புதிதாக வாங்கி இருக்கும் நிலத்துக்கான பத்திரப்பதிவு நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் வருவதை அறிந்து அவரைக் காண அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இதையும் படியுங்கள்...மஞ்சுமெல் பாய்ஸ் எனும் மாஸ்டர் பீஸ் படத்தை இயக்கியவர்... யார் இந்த சிதம்பரம்; அவர் இயக்கிய படங்கள் என்னென்ன?

34
Rajinikanth

Rajinikanth

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் அங்கு வந்ததன் பின்னர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறாராம் ரஜினி. அதற்காக பத்திரப்பதிவு செய்வதற்காக தான் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார் ரஜினி. மேலும் அந்த இடத்தில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டும் முடிவில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

44

அந்த மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தரத்தில் இலவச சிகிச்சை அளிக்க உள்ளாராம். அதே நேரத்தில் வசதிவாய்ந்தவர்களுக்கு பணம் வசூலிக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றும், தற்போது தான் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால், அந்த கட்டுமான பணிகளை உடன் இருந்து கவனித்துக் கொள்ள தன் நண்பர் ஒருவரை ரஜினி நியமித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்...பாலா இயக்கத்தில் பாலய்யாவா! ஒய் திஸ் கொலவெறி பாஸ்? பற்ற வைத்த பிரபலம்... பதறிப்போன ரசிகர்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved