இளையராஜா உடன் சண்டை... நான் இசையமைப்பாளர் ஆனதற்கு காரணமே இதுதான் - மனம்திறந்த மிஷ்கின்
இசைஞானி இளையராஜா உடன் சண்டை போட்டதால் தான் டெவில் படத்தில் இசையமைப்பாளர் ஆனேன் என இயக்குனர் மிஷ்கின் கூறி இருக்கிறார்.
mysskin, Ilaiyaraaja
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி, அஞ்டாதே, யுத்தம் செய் என அவரின் படங்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் தற்போது படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு, நடிப்பில் பிசியாகிவிட்டார். அண்மையில் சிவகார்த்திகேயனின் மாவீரன், விஜய்யின் லியோ படங்களில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.
Director Mysskin
தற்போது இசையமைப்பாளராகவும் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் மிஷ்கின். அவர் இசையமைப்பில் டெவில் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சவரக்கத்தி படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கி உள்ளார். இப்படத்தில் வித்தார்த், பூர்ணா மற்றும் மிஷ்கின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ள மிஷ்கின், அதன் பின்னணியை கூறி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Devil movie music director Mysskin
அதன்படி அவர் கூறியதாவது : “எனக்கு கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையை கற்றுத்தந்த ராமமூர்த்தி எனக்கு குருநாதர். அதேபோல் எனக்கு இன்னொரு குரு இருக்கிறார். அவர் பெயர் இளையராஜா. எனக்கு 8 வயசு இருக்கும்போது என் தந்தையின் தோளின்மீது அமர்ந்து சவாரி செய்யும்போது, அன்னக்கிளி பட பாடலைக் கேட்பதற்காக என் தந்தையின் தலை முடியை இழுத்து நிறுத்தினேன். அப்போதில் இருந்தே இளையராஜா என் குருநாதர் ஆகிவிட்டார்.
Mysskin
பின்னர் ஏன் இசையமைப்பாளர் ஆனாய் என்று தானே கேட்கிறீர்கள். அதற்கும் இளையராஜா தான் காரணம். அவருடன் சண்டை போட்டுவிட்டேன். எனக்கு கோபம் அதிகம் வரும். மறுபடியும் அவரிடம் போய் நிற்க முடியாது அதுமட்டுமின்றி எனக்கும் ரொம்ப போர் அடிக்கிறது, என்ன செய்றதுனே தெரியாமல் இருந்ததால் இசையமைக்க முடிவு செய்தேன். இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் தன் இந்த உலகின் மிகப்பெரிய இசை ஆளுமைகள். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள், நான் அல்ல” என்று மிஷ்கின் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நடிகைகளுக்கு தலைவலியாக மாறிய AI... ராஷ்மிகாவை தொடர்ந்து ஆபாச உடையில் சிக்கிய கத்ரீனா கைஃப்