சிவகார்த்திகேயன் செய்த துரோகம் இது தான்! டி.இமான் குற்றச்சாட்டு குறித்து பேசிய முதல் மனைவி மோனிகா!
சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக, இசையமைப்பாளர் டி இமான் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்... தற்போது இது குறித்து அவரின் முதல் மனைவி மோனிகா, பேசியுள்ளார்.
D Imman About Sivakarthikeyan:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் குறித்து, பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கூறிய தகவல் தான், தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
Sivakarthikeyan and D Imman Combo:
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'மனம் கொத்தி பறவை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' என சிவாவின் அடுத்தடுத்த படங்களில் டி இமான் கைகோர்த்து இசையில் கலக்கிய நிலையில், கடந்த சில வருடங்களாக ஏன் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றவில்லை என சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று டி.இமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
Sivakarthikeyan Betrayal
இதற்க்கு சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் தான் காரணம் என இமான் கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஜென்மத்தில், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து படம் பண்ணுவது கஷ்டம் என்றும், சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும், எனக்கு... சிவகார்த்திகேயன் செய்தது மிகப்பெரிய துரோகம், ஆனால் அதனை வெளியே சொல்ல முடியாது என தெரிவித்தார்.
Sivakarthikeyan is a reason for Monicka Divorce:
அதேபோல் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை நான் வெளியே சொல்ல மறுப்பதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இதை தொடர்ந்து இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், சிவகார்த்திகேயன் அப்படி என்ன துரோகம் செய்தார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், சிலர் டி.இமான் அவரின் முதல் மனைவியை விவாகரத்து செய்ய காரணம் சிவகார்த்திகேயன் தானா? என சாடி வந்தனர்.
Sivakarthikeyan Statement Expected:
எனவே விரைவில் இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து, சரியான காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டி இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
Monicka about Sivakarthikeyan:
பிரபல இணையதளம் ஒன்றுக்கு டி.இமானின் முதல் மனைவி, மோனிகா ரிச்சர்ட்டை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது, "சிவகார்த்திகேயன் தங்களுடைய குடும்ப நண்பர். இமானுக்கும் அவருக்கும் உள்ள நட்பின் அடிப்படையில், எப்போதுமே எங்களுடைய குடும்பத்தின் மீது மிகவும் அன்பாகவும் என்னுடைய மகள்கள் மீது பாசமாகவும் இருப்பார். எனவே எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஒற்றுமையாக வாழும் படி பலமுறை இமானிடம் பேசினார்.
Sivakarthikeyan Not Accepted Imman Decision:
இமானின் முடிவை அவர் ஆதரிக்காததால், சிவகார்த்திகேயன் மீது அவருக்கு கோபம் வந்தது. அதை தான் இமான் துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார். இது எனக்கு புரியும். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறு மாதிரி புரிகிறது. ஒரு நல்ல குடும்ப நண்பர் என்றாலே, அவரின் நண்பர் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்பது என்று நினைப்பதுதான் இயல்பு.
D imman Second Marriage:
ஆனால் டி இமான் ஏற்கனவே பெண்ணை எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டு, தன்னிடம் விவாகரத்து கேட்டார். நான் விவாகரத்து தர முடியாது என சொன்னபோது, அரசியல்வாதிகளை வைத்து என் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார். விடாப்பிடியாக என்னிடம் இருந்து 46 நாட்களில் விவாகரத்தையும் பெற்றார்.
Monicka life;
குழந்தைகள் வேண்டுமா? ஜீவனாம்சம் வேண்டுமா? என அவர் என்னை கேட்டபோது எனக்கு குழந்தைகள் தான் வேண்டும் என, என்னுடைய மகள்களுடன் வந்து விட்டேன். நான் கஷ்டப்பட்டு துவங்கிய கம்பெனி தற்போது வெற்றிகரமாக செல்கிறது. 30 பேருக்கு சம்பளம் கொடுத்து இன்று ஒரு இடத்தை அடைந்துள்ளேன். எனவே அவர் சொல்வதைப் பற்றி யோசிப்பதற்கு கூட எனக்கு நேரமில்லை. என்னுடைய கஷ்டங்களை என்னுடைய மகள்கள் கூட இருந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் இமான் நல்லவரா என்பது!!
Monicka clarify imman speech:
தற்போது அவரிடம் வாய்ப்புகள் இல்லை எனவே பப்ளிசிட்டிக்காக இமான் இப்படி பேசுகிறார். இப்படி பேசுவதால் மீண்டும் அவரைப் பற்றிய பரபரப்பான தகவல்கள் பேசப்படும், இதன் மூலம் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இதன் காரணமாகவே இப்போது சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் இமானின் முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யாதது தான் அவர் செய்த துரோகம் என்பதை மோனிகா மீண்டும் பதிவு செய்துள்ளார் மோனிகா என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி விகடன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D