புலிக்கு பிறந்தது பூனையாகுமா? கால் பந்தில் கலக்கும் குட்டி தல! கழுத்தில் பதக்கத்துடன் கெத்தாக நிற்கும் ஆத்விக்
தல அஜித்தின் மகன், ஆத்விக் கால் பந்து போட்டியில் கலக்கி வருவதோடு மட்டும் இன்றி, போட்டியில் கலந்து வெற்றி பெற்று கழுத்தில் மெடலுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Ajith in Vidamuyarchi shooting:
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் அஜித் தற்போது, அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகை திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்களும் அஜர்பைஜான் சென்றுள்ளனர். ஒரு மாதத்திற்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னரே படக்குழு இந்தியா திரும்பும் என கூறப்படுகிறது.
Ajith Interested for extra curricular Activities
தல அஜித்துக்கு நடிப்பு அவரின் கேரியர் என்றாலும், அதை தாண்டி... பல விஷயங்களில் அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டுவார். குறிப்பாக சமையலில் துவங்கி, போட்டோ கிராபி, பைக் ரேஸ், கார் ரேஸ், ஏரோ மாடலிங், ரிஃப்பில் ஷூட்டிங் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. அதே போல் தன்னுடைய மனைவிக்கு ஷெட்டில் பிடிக்கும் என்பதற்காக ஒரு ஷெட்டில் கோர்ட்டையும் வீட்டிலேயே கட்டி கொடுத்தார் அஜித்.
Ajith Son Aadvik interested for foot ball
தன்னை போலவே தன்னுடைய பிள்ளைகளையும், ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் கொண்டவர்களாக வளர்க்க விருப்பப்படுகிறார் அஜித். அதிலும் அஜித்தின் மகன், ஆத்வைத்துக்கு கால் பந்து விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். சென்னை நேற்று ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடைபெற்ற போது கூட, தன்னுடைய அம்மா மற்றும் நண்பர்களுடன் வந்து கண்டுகளித்தார்.
Aadvik kumar won Foot ball match:
8 வயதிலேயே வெறித்தனமான ஃபுட் பால் பிளேயராக இருக்கும் ஆத்விக் தற்போது, தன்னுடைய பள்ளி சார்பில் இருந்து, நடத்தப்பட்ட ஃ புட் பால் போட்டியில்... கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய நண்பர்களுடன், ஆத்விக் கழுத்தில் வெற்றி புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, தல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்கிற கேப்ஷனுடன் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D