ஒரு ஹிந்தி.. ஒரு தெலுங்கு.. இரண்டு தமிழ்.. மொத்தம் நாலு - அடுத்தடுத்த படங்கள் குறித்து அட்லீ கொடுத்த அப்டேட்!
Atlee Kumar Movies : பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அட்லீ குமார் இயக்கத்தில் இறுதியாக இவ்வாண்டு வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. மேலும் வசூல் சாதனையையும் படைத்தது. விரைவில் அவர் தனது அடுத்த பட பணிகளை துவங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Jeeva Movie
பிரபல இயக்குனர் சங்கரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியேற்றி அதன் பிறகு ஆர்யாவின் ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ குமார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை தளபதி விஜய் அவர்களை வைத்து கொடுத்த ஒரு நல்ல இய்குனார் அவர்.
Thalapathy vijay
இயக்குனராக அவருடைய இந்த 10 ஆண்டுகால திரை பயணத்தில் அவர் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான "சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தையும், அதே போல கடந்த 2020ம் ஆண்டு வெளியான "அந்தகாரம்" என்ற படத்தையும் அவர் தயாரித்து வெளியிட்டார்.
Mersal Atlee
இந்நிலையில் ஒரு தயாரிப்பாளராக தனது அடுத்தடுத்த படங்களை குறித்து பேசியுள்ள அட்லீ, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தை தயாரித்து வருவதாகவும். மேலும் இரு தமிழ் படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த பட பணிகளை முடித்த பிறகு தளபதி விஜய் மற்றும் ஷாருகான் ஆகியோரை வைத்து தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.