நச்சுனு 4 ஃபாரீன் பட கதையை திருடுறேன்.. படம் பண்றேன்.. ஆள விடுங்க சாமி - குசும்புக்கார பிரதீப் போட்ட ட்வீட்!
Bigg Boss Pradeep Antony : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த கலைஞர்கள் பலர் உண்டு. அந்த வகையில் ஓவியாவை ஓரம்கட்டும் அளவிற்கு மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு சிறந்த போட்டியாளராக மாறியவர் தான் பிரதீப்.
பிரபல நடிகர் கவின் அவர்களுடைய நண்பரான பிரதீப் ஆன்டனி ஒரு சில திரைப்படங்களில் நடிகராக வளம்வந்துள்ளார். கவின் பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவருக்கு ஒரு பளார் வைத்தது அனைவரும் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் பங்கேற்ற பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அதுவும், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அவர் ஒரு விமனைசர் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டது பலரை கடுப்பேத்தியது. அதிலும் குறிப்பாக மாயா மற்றும் கோ மீது பிக் பாஸ் விரும்பிகள் உச்சகட்ட கோவத்தில் இருந்து வருகின்றனர். .
இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரதீப் நுழைவார் என்றும், அப்போது மாயா மற்றும் பூர்ணிமா கதி என்னவாகும் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தது. அதற்கு தகுந்தாற்போல பிரதீப் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரசியமான பல ட்வீட்களை போட்டு வந்தார்.
இந்நிலையில் இப்பொது அவர் போட்டுள்ள ஒரு ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தனது குணத்தை தவறாக சித்தரித்து பலரால் தான் வெளியே திட்டமிட்டு அனுப்பப்பட்டதாக கூறிவந்த பிரதீப், இனி அதை பற்றி கவலைப்பட போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட ஒரு பதிவில் "சரி.. ஜாலியா இருந்துச்சு.. இப்போ ஒரு 4 - 5 தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேட்க வராங்க. நான் IFFI GOA 2024க்கு கிளம்புறேன். 4 ஃபாரீன் பட கதைகளை பார்த்து, திருடி ஒரு நல்ல கதை ரெடி பண்ணிட்டு படத்தோட வரேன்.. ஆள விடுங்க.. நீங்களாச்சு.. பிக் பாசாச்சு.. போயிடு வரேன்.. நல்லா இருங்க" என்று கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இப்பொது தனது கிடைத்திருக்கும் வாய்ப்புகளை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதை தெளிவுபடுத்தியுள்ளார் அவர்.