தலைவர் 171 கதை எனக்கு தெரியும்.. அப்புறம் லோகேஷ் பத்தி ஒன்னு சொல்லணும் - சில ரகசியங்களை உடைத்த இயக்குனர் GVM!
Thalaivar 171 Story : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 170வது பட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திலும் ஒரு காவல்துறை அதிகாரியாக அவர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
Super Star Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகின்றது. 72 வயதை கடந்துவிட்டபோதிலும் இளம் நாயகர்களுக்கு இணையாக வசூல் சாதனைகளை படைக்கும் டாப் நடிகராக அவர் வளம்வருவது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
காக்கா - கழுகு கதையால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. ரஜினி, விஜயை சீண்டிய லெஜண்ட் சரவணன்
Jailer
இந்நிலையில் இறுதியாக பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாக சில சரிவுகளை சந்தித்தாலும், உலக அளவில் வசூல் ரீதியாக 600 கோடி என்ற அளவை தாண்டியது. அது மட்டுமல்லாமல் ஒரு பெரிய தொகைக்கு Amazon Prime OTT தளத்தில் விற்பனையானது.
Gnanavel
தற்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் பட பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தபடியாக ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தலைவர் 171 படம் குறித்த ஒரு தகவலை பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ஒரு தனியார் நிறுவன பேட்டியில் பேசிய அவர்..
Gautham Vasudev Menon
லோகேஷ் கனகராஜ் எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள 8 இயக்குனர்களிடம் தலைவர் 171 பட கதை குறித்து விவாதித்தார். ஆகையால் எனக்கு அந்த படத்தின் கதை நன்றாக தெரியும். மாஸ் திரைப்படமாக அது அமையும். அப்புறம் லோகேஷ் பத்தி ஒன்னு சொல்லணும் அவர் 10 படங்கள் இயக்கிவிட்டு ஓய்வுபெறப்போகும் இயக்குனரல்ல, 100 படங்கள் இயக்கப்போகும் இயக்குனர் என்றார் அவர்.