காக்கா - கழுகு கதையால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. ரஜினி, விஜயை சீண்டிய லெஜண்ட் சரவணன்
காக்கா, கழுகு கதை சர்ச்சை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. லெஜண்ட் சரவணன் ரஜினி மற்றும் விஜயை சீண்டினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் காக்கா - கழுகு என்ற சர்ச்சைகளை வைத்து இரு பெரும் நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே இன்று வரை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு அலுவலக கட்டடத் மதிறப்பு விழா சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது.
இதில் தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய லெஜன்ட் சரவணன் காக்கா - கழுகு கதையை பற்றி பேசியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அந்த விழாவில் பேசிய லெஜன்ட் சரவணன், “இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் அதில் காக்கா - கழுகு கதைகள், இவருக்கு அந்த பட்டம் இவருக்கு இந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடைக்காது. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும்” என்று கூறி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..