மெளன ராகம் ஹிட்டான பின் மணிரத்னம் கொடுத்த மாஸ்டர் பீஸ் பட வாய்ப்பு.. நடிக்கவே மாட்டேன்னு ரிஜெக்ட் பண்ணிய மோகன்
மணிரத்னம் இயக்கத்தில் மெளன ராகம் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தில் நடித்த மோகன், அவர் கொடுத்த மற்றுமொரு பட வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.
Mohan
1980களில் டிரெண்டிங் ஹீரோவாக வலம் வந்தவர் மோகன். அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெள்ளி விழா கண்டதால் வெள்ளி விழா நாயகனாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார் மோகன். 10 ஆண்டுகளில் ரஜினி, கமலுக்கு நிகரான வளர்ச்சியை கண்ட மோகன், அதன் பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் பக்கமே தலைகாட்டாமல் இருந்த மோகன், தற்போது ஹரா படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
Mike Mohan
நடிகர் மோகனின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவர், அவர் இயக்கத்தில் மோகன் நடித்த மெளன ராகம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய மாஸ்டர் பீஸ் படத்தை இந்த காம்போ, மறுபடியும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஆனால் அது தான் உண்மை.
இதையும் படியுங்கள்... கோலிவுடிலும் செம பிரபலம்.. 490 கோடிக்கு அதிபதி.. கின்னஸ் சாதனை படைத்த Indiaவின் பணக்கார காமெடியன்? யார் அவர்?
Anjali Movie
மெளன ராகம் படத்தின் வெற்றிக்கு பின்னர் மோகன், ரேவதி ஜோடியை வைத்து இயக்குனர் மோகன் இயக்க நினைத்த திரைப்படம் தான் அஞ்சலி. மெளன ராகம் படத்தின் தொடர்ச்சியாக அஞ்சலி படத்தை இயக்க நினைத்திருக்கிறார் மணிரத்னம். அவர்களுக்கு குழந்தை இருக்கும்படி திரைக்கதை அமைத்து, அதை மோகனிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் மோகன் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஏனெனில் அந்த கதையில் மோகனுக்கு உடன்பாடு இல்லையாம்.
mohan Maniratnam
அஞ்சலி படத்தில் ஸ்பெஷல் சைல்டாக ஷாமிலி நடித்திருந்தார். அவரை தனி அறையில் வைப்பது போன்ற காட்சிகளில் நடிகர் மோகனுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் மோகன். அதன்பின்னரே ரகுவரனை அஞ்சலி படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை நடிகர் மோகன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Arjun : ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு டும் டும் டும்.. நாளை நடக்கும் திருமணம் - அதற்கு முன் மாமனார் போட்ட கண்டிஷன்!