- Home
- Gallery
- சிற்பங்கள்.. ஓவியங்கள்.. சுற்றி தோட்டம்.. கேரளா ஸ்டைல் பிரம்மாண்ட வீடு.. மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
சிற்பங்கள்.. ஓவியங்கள்.. சுற்றி தோட்டம்.. கேரளா ஸ்டைல் பிரம்மாண்ட வீடு.. மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
பிரபல யூ டியூப் சேனல் ஒன்றில் தனது வீட்டை சுற்றி காட்டி உள்ளார் மீனா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Meena
நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. இதை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் சிறுவயதிலேயே பிரபலமானார்.
Meena
பின்னர் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 90களில் முன்னணி நடிகையாக மாறினார் மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டானார்.
Meena
தொடர்ந்து எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, வானத்தை போல், ரிதம், ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
Meena
கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தின் விஜய்யின் மகளாக நடித்தார்.
Meena
இதனிடையே மீனாவின் கணவர் 2022-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா சிறிது காலம் வெளியே வராமல் இருந்த அவர் தற்போது மீடியாவில் வர ஆரம்பித்திருக்கிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார்.
இந்த நிலையில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றில் தனது வீட்டை சுற்றி காட்டி உள்ளார். மீனா. மிகப்பெரிய தோட்டத்துடன் கேரளா ஸ்டைலில் பிரம்மாண்டமாக அவரின் வீடு கட்டப்பட்டுள்ளது. கற்களால் ஆன சிற்பங்கள், அழகிய ஓவியங்கள் மிகவும் பாரம்பரிய முறையில் வீட்டை கட்டி உள்ளார் மீனா. அவரின் வீட்டில் பல அறைகள், நீச்சள் குளம், மினி தியேட்டர் என சகல வசதிகளும் உள்ளது.
மீனாவின் கணவர் வித்யாசாகர் ஒரு பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றினார். அவரின் மாத சம்பளம் ரூ.3 முதல் 4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மீனாவும் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார். அவரின் லட்சங்களில் சம்பளம் பெற்றார். இதனால் மீனாவின் பேங்க் பேலன்ஸ் பல கோடி இருக்கும் என்றும், அவரின் சொத்து மதிப்பு ரூ.35 முதல் ரூ.40 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.