- Home
- Gallery
- சுடரை பார்த்து பதறி போன இந்து! அதிர்ச்சியில் மனோகரி.. நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
சுடரை பார்த்து பதறி போன இந்து! அதிர்ச்சியில் மனோகரி.. நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் இந்துமதியின் போட்டோவை எடுத்து வந்து வைத்து பூஜையை செய்ய தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது எழில் பக்கத்தில் உட்கார ஆசையாக காத்திருந்த மனோகரி இதனால் கடுப்பாகி கோவம் அடைகிறாள். இந்த பூஜை நல்லபடியா நடக்கக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். பிறகு செல்வியிடம் ஒருவகையான லிக்யூடை கலந்த நெய்யை கொடுத்து அதை போட்டோவின் மீது கொட்ட சொல்கிறாள்.
பிறகு சுடர் வீட்டுக்கு வர இதை பார்த்த இந்த இவர் உள்ள வந்து போட்டோவை பார்த்துவிட்டால் நான் உயிரோட இல்ல என்ற விஷயம் தெரிந்து விடும் என்று பதறுகிறாள். இதையடுத்து சுடர் வீட்டுக்குள் நுழையும் சமயத்தில் இந்துமதி அவளை தடுத்து நிறுத்தி தீபா கீழ விழுந்து அவளுக்கே கால்ல பயங்கரமான அடி வலியில் துடிச்சுக்கிட்டு இருக்கா.. நீ என் கூடவே வந்தேனா அவளை தூக்கி பெட்ல படுக்க வைத்துவிட்டு காலுக்கு கொஞ்சம் சுடுதண்ணி ஒத்தனம் கொடுத்துட்டு வரலாம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள்.
தீபா டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க இந்து என்ன எங்க டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க என்று கேட்க இந்துமதி அது டான்ஸ் இல்ல வலியில துடிக்கிறா என்று சமாளிக்கிறாள். பிறகு தீபாவுக்கு சுடர் சுடு தண்ணீரில் ஒத்தரம் கொடுத்துவிட்டு கிளம்ப முயற்சி செய்ய தீபா தலை வலிக்குது என்று காபி கேட்கிறாள்.
சுடர் காபி போட பல நேரத்தில் தீபாவுக்கு ஹவுஸ் ஓனர் போன் பண்ண பதறிப் போய் அவள் கெட்டப்பை மாற்றி ஓனரிடம் வீடியோ காலில் பேச சுடர் என்ன இது இப்படி ஓடிட்டாங்க என்று கேட்க இந்துமதி நீ கை வைத்ததும் அவளுக்கு சரியாகிவிட்டது என்று சொல்கிறாள்.
மறுபக்கம் செல்வி மனோகரி சொன்னது போல நெய்யை கொண்டு வந்து இந்துமதி போட்டோ மீது ஊற்றி விடுகிறாள். நெய் என்பதால் கை வழுக்கி விட்டதாக பொய் சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு சுடர் உள்ள என்னுடைய இந்துமதி பதற்றம் அடைய சுடரை அவளைப் பார்த்த நீ மேல போய் டிரஸ் மாத்திட்டு ரெடியாகிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்க ரூமுக்கு வந்த சுடர் எழில் கொடுத்த புடவையை கட்டிக் கொள்கிறாள்.
பிறகு சுடர் கீழே இறங்கி வர இதைப்பார்த்த மனோகரிக்கு இந்துமதி இறங்கி வருவது போல் தெரிய அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.