விஜய் சேதுபதி இடத்தை Replace செய்த மிர்ச்சி சிவா... சூப்பர் அப்டேட் உடன் வெளிவந்த ‘சூது கவ்வும் 2’ ஸ்டில்ஸ்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து வருகிறார்.
soodhu kavvum 2
விஜய் சேதுபதியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் முக்கியமான ஒன்று சூது கவ்வும். அப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவில் புதுவிதமான டார்க் காமெடி படமாக இது இருந்ததால் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் அசோக் செல்வன் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
soodhu kavvum 2 movie Stills
இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணியாற்றிய யாரும் இதில் பணியாற்றியவில்லை. இப்படத்தை முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டுதான் எடுத்துள்ளனர். இப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
soodhu kavvum 2 shooting spot photos
சூது கவ்வும் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து உள்ளது. இப்படத்தை நாடும் நாட்டு மக்களும் என்கிற டேக் லைனோடு வெளியிட உள்ளனர். முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக குறிப்பிட்டு அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
soodhu kavvum 2 BTS photos
இப்படத்தை எ.ஜே.அர்ஜுன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இதில் நடிகர் மிர்ச்சி சிவா உடன், ராதாரவி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷா, அருள்தாஸ், ரமேஷ் திலக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போகாம யாரு போவா..! மாரி செல்வராஜை விமர்சித்தவர்களை வெளுத்துவாங்கிய வடிவேலு