MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • School Holiday: ஹேப்பி நியூஸ்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

School Holiday: ஹேப்பி நியூஸ்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 13 2024, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
melmalayanur

melmalayanur

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா மார்ச் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 12ம் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
local holiday

local holiday

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மார்ச் 14ம் தேதியான நாளை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

34
viluppuram district collector

viluppuram district collector

இதுகுறித்து  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 14 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

44
school holiday

school holiday

மேற்படி, தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் அன்று தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 23ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved