Mansoor Ali Khan: நான் தான் த்ரிஷா மீது வழக்கு போடணும்! தெரியாமல் பேசும் லோகேஷ்! மன்சூர் அலிகான் பகீர் பேட்டி!
நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரம் குறித்து, பேட்டி கொடுத்துள்ள இவர் த்ரிஷா மீது நான் தான் வழக்கு போடவேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில், முன்னணி வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும், மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, லியோ படத்தில் தனக்கும் நடிகை த்ரிஷாவுக்கும் ஒரு காட்சி கூட இல்லை என்கிற வருத்தத்தை, மோசமான வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். இதில் நடிகைகள் குஷ்பூ மற்றும் ரோஜாவின் பெயரையும் இழுப்பு சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் இந்த பேச்சுக்கு, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, வானதி ஸ்ரீனிவாசன், சிரஞ்சீவி, உட்பட பல பிரபலங்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூல் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவித்தது. இதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையமும் இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்தது.
இந்த விவகாரம் கடந்த 3 நாட்களாக இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது நன்றாக தெரியும். பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை.
நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை, நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்' என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
Actress Trisha Krishnan
அதே போல் ஏற்கனவே நான் த்ரிஷா மீது தனி நபர் தாக்குதல் நடத்தவில்லை என்றும், அப்படி என்னால் பேச முடியாது. நான் என்னுடைய படத்தை இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் செய்ய உள்ளேன். அதே போல் பிரபல அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளேன். இதனால் என்னை பழி வாங்க வேண்டும் என்பதற்காக, யாரோ சிலர், திட்டமிட்டு நான் தவறாக பேசியது போல் சித்தரித்து, எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D