ஆந்திராவில் வருகிற மே 13-ந் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் தான் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. பின்னர் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்தகட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், வருகிற மே 13-ந் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இந்த தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் அதற்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த தேர்தலில் அதற்கு போட்டியாக பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி களமிறங்கி உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... MODI : ஜனநாயகக் கடமையாற்றிய மோடி; சாலையில் நடந்து மக்களிடம் வாக்களிப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரதமர்

ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி மற்றும் அனகபல்லே பகுதிகளில் நேற்று பாஜக கூட்டணியின் பிரம்மாண்டமான பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் பிரச்சார மேடைக்கு வந்த ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற கையோடு அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். உடனே அவரை எழச் சொல்லி இப்படி காலில் விழக்கூடாது என கண்டித்தார் பிரதமர் மோடி. பின்னர் பிரதமருக்கு சாமி சிலை ஒன்றை பரிசாக வழங்கினார் பவன் கல்யாண். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... செம டான்ஸ்... நானும் என்ஜாய் பண்றேன்! மம்தாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!