- Home
- Gallery
- Pritha Hari: எங்களின் தேவதையே.. அம்மா மஞ்சுளா பிறந்தநாளுக்கு அரிய புகைப்படங்களை வெளியிட்டு! உருகிய ப்ரீத்தா!
Pritha Hari: எங்களின் தேவதையே.. அம்மா மஞ்சுளா பிறந்தநாளுக்கு அரிய புகைப்படங்களை வெளியிட்டு! உருகிய ப்ரீத்தா!
நடிகையும், இயக்குனர் ஹரியின் மனைவியுமான ப்ரீத்தா, தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளில்... அவரின் சில அரிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு உருகியுள்ளார்.

பழம்பெரு நடிகர் விஜய குமார், நடிகை மஞ்சுளாவை காதலித்த நிலையில்... தன்னுடைய முதல் மனைவி முத்துகன்னு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை எம்.ஜி.ஆர் தான் முன்னின்று நடத்தி வைத்தார்.
விஜயகுமாருக்கு முதல் மனைவி முத்துகன்னு மூலம் கவிதா, அனிதா என்கிற இரண்டு மகள்களும், அருண் விஜய் என்கிற மகனும் உள்ளார். இரண்டாவது மனைவியான மஞ்சுளா மூலம் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.
வனிதாவை மட்டும் ஒட்டு மொத்த குடும்பமும் ஒதுக்கி விட்ட நிலையில்... ப்ரீத்தா - ஸ்ரீதேவி ஆகியோர் மட்டும் விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தியா - திலான் திருமண கொண்டாட்டத்தில் ஸ்ரீதேவி, ப்ரீத்தா கலந்து கொண்ட நிலையில், அண்மையில் லண்டலின் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியும், ப்ரீத்தாவும் கலந்து கொள்ள வில்லை. சென்னையில் இருந்த முக்கிய பனி காரணமாக இவர்கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது தன்னுடைய அம்மா மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு அவரை பற்றிய சில அரிய புகைப்படங்களை வெளியிட்டு... நீங்கள் எங்களின் தேவதை அம்மா என்றும், உங்களை மிஸ் செய்கிறோம் என்றும் உருக்கமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார் ப்ரீத்தா. இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ப்ரீத்தா, மஞ்சுளாவுக்கு பிறந்த இரண்டாவது மகள் ஆவார். ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், இயக்குனர் ஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மூன்று மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.