- Home
- Gallery
- ரத்த வெள்ளத்தில் மிதந்தார் சினேகா! முதுகெலும்பு உடைந்து போயிருக்கும்.. விபத்து குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்
ரத்த வெள்ளத்தில் மிதந்தார் சினேகா! முதுகெலும்பு உடைந்து போயிருக்கும்.. விபத்து குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த், தனக்கும் சினேகாவுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து முதல் முறையாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை சினேகா. பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
Actress Sneha
தற்போது நடிகை சினேகாவுக்கு 42 வயதாகும் நிலையில்... தொடர்ந்து சினிமாவில் தரமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக தளபதி விஜய்யை வைத்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில், அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சினேகாவுக்கும், தனக்கும் நடந்த விபத்து குறித்து... பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கல்லூரி நண்பர்கள் இடையே உள்ள நட்பு குறித்தும்... நண்பர்களாக இருக்கும் ஸ்ரீகாந்த் - சினேகா இருவரும் எப்படி காதலர்களாக மாறுகிறார்கள். இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்களா? என இளவட்ட ரசிகர்களை கவரும் விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் வெங்கட் பிரபு, காயத்ரி ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்திக்கொண்டிருக்கும் போது தான் சினேகா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் விபத்தில் சிக்கி உள்ளனர். தன்னால் மறக்க முடியாத அந்த சம்பவம் குறித்து தான் தற்போது ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். தன்னால் அந்த விபத்தை எப்போதுமே மறக்க முடியாது என தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், இந்த விபத்தில் சிக்கிய போது சினேகா, ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும், அவரது முதுகெலும்பு உடையும் நிலையில் இருந்ததாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வரலட்சுமி திருமணத்தில் இந்த சிக்கல் வரலாம்.. நிக்கோலாய் இப்படிப்பட்டவரா? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..
ஒரே சமயத்தில் இருவரும் விபத்தில் சிக்கினாலும், வெவ்வேறு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தோரும். உடல் நலம் தெரிய பின்னர்... இருவருமே மருத்துவமனையில் இருந்து வந்து, படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இணைந்து நடித்த போது சினேகா - ஸ்ரீகாந்த் இருவரும் காதலித்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.