- Home
- Gallery
- விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் இரண்டு லெஜெண்ட்ஸ் நடிகைகள்! வைரலாகும் போட்டோ!
விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் இரண்டு லெஜெண்ட்ஸ் நடிகைகள்! வைரலாகும் போட்டோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் இரண்டு லெஜெண்ட் நடிகைகள் நடிக்க உள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்குமே... இல்ல தரசிகளை தாண்டி பல இளம் ரசிகர்கள் மத்தியிலில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் சீரியல் காஸ்டிங், கதைக்களத்தை, சீரியலை கொண்டு செல்லும் விதம் போன்ற சில விஷயங்களிலும் விஜய் டிவி ரசிகர்களை வசீகரித்துவிடுகிறது.
அந்த வகையில் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியல், 'சிறகடிக்க ஆசை'. கடந்த ஒரு வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில்... "ஏழை வீட்டில் இருந்து மருமகளாக வரும் பெண்ணை மாமியார் எப்படி வார்த்தையிலேயே நோகடிக்கிறார், பணக்கார மருமகள்களை எப்படி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் " என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்பார்க்காத திருப்பங்களுடனும், விறுவிறுப்பாகவும்... பரபரப்பான காட்சிகளுடனும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், அண்ணாமலை தன்னுடைய அம்மாவின் 70-ஆவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி உள்ளார்.
பாட்டியும் தனக்கு பிடித்தது போல பரிசு தரும் பேரன்... பேத்திக்கு நான் ஒரு பரிசு கொடுப்பேன் என கூறி உள்ளார். இது ஒருபுறம் இருக்க, இனி வரும் எபிசோடில் இரண்டு லெஜெண்ட் நடிகைகள் நடிப்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் தான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர். பாட்டிக்கு செயின் வாங்க நினைந்த மீனா - முத்துவுக்கு மனோஜின் குளறுபடியால் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில்... பாட்டியின் இளம் வயது தோழிகளை, அவரின் பிறந்தநாளுக்கு வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள் என தெரிகிறது. மேலும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் கே.ஆர்.விஜயா மற்றும் வடிவுக்கரசியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.