Asianet News TamilAsianet News Tamil

'கல்வி விருது விழா' முடிந்த பின்னர்... யாரும் எதிர்பாராததை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி!

தளபதி விஜய் நேற்று கல்கி விருது விழாவை முடித்து கொண்டு செல்லும் போது... தன்னை பார்க்க திருமண மண்டபத்தின் வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Thalapathy vijay give the sweet surprise for fans mma
Author
First Published Jul 4, 2024, 2:54 PM IST

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தன்னுடைய தந்தை SAC இயக்கத்தில் கதாநாயகனாக மாறியவர் தளபதி. இவர் ஒரு ஹீரோ மெட்டீரியலே இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை தகர்த்தெறிந்து முன்னணி இடத்தை பிடிக்க, தளபதி பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சந்தித்த, ஏற்ற இரக்கம் தான் இன்று அவர் யாராலும் எட்ட முடியாத உச்சத்தை அடைய காரணமாகவும் அமைந்தது. ஒரு படத்திற்கு ரூ.200 கொடி சம்பளம் பெரும் நாயகனாக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு அதிரடியாக திரையுலகில் இருந்து விலகி... மக்கள் பணிக்காக அரசியலில் கால் பாதிக்க உள்ள தகவலை வெளியிட்டார். இவர் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள 69-ஆவது படம் தான் இவரின் கடைசி படம் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

Thalapathy vijay give the sweet surprise for fans mma

ரத்த வெள்ளத்தில் மிதந்தார் சினேகா! முதுகெலும்பு உடைந்து போயிருக்கும்.. விபத்து குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்

கூடிய விரைவில் இந்த படத்தின் பணியை முடித்து விட்டு... 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முரணேற்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

முழு அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பே, தொடர்ந்து மக்கள் நல பணிகளிலும்... 234 தொகுதியிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கும் விழா, 2 கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த 28-ஆம் தேதி, முதல் கட்டமாக ஊக்கத்தொகை கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில், 2-ஆம் கட்ட ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Thalapathy vijay give the sweet surprise for fans mma

இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திருவான்மியூரில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்த நடந்தது. காலை 9 மணியளவில் கல்வி விருது விழா துவங்கப்பட்ட நிலையில், இரவு 10 மணிவரை நடந்தது. விஜய் டீ பிரேக், மற்றும் சிறு லன்ச் பிரேக் எடுத்து கொண்டு தொடர்ந்து நின்றபடியே மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் இரண்டு லெஜெண்ட்ஸ் நடிகைகள்! வைரலாகும் போட்டோ!

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் வெளியே வரும் விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திருமண மண்டபத்தின் வாசலிலேயே நின்றுருப்பதை அறிந்த விஜய், காரில் ஏறி வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக..மண்டபத்தின் சுவர் மீது ஏறி... ரசிகர்களுக்கு கை அசைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். இதுகுறித்த வீடியோ மற்றும் போட்டோஸ் வைரலாகி வருகிறது. 
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios