- Home
- Gallery
- தடாலடியாக TRP-யில் முக்கிய சீரியலை பின்னுக்கு தள்ளிய புதிய தொடர்! கெத்து காட்டும் விஜய் டிவி! டாப் 10 லிஸ்ட்!
தடாலடியாக TRP-யில் முக்கிய சீரியலை பின்னுக்கு தள்ளிய புதிய தொடர்! கெத்து காட்டும் விஜய் டிவி! டாப் 10 லிஸ்ட்!
இந்த வாரம் டாப் 10 TRP பட்டியலில், இடம்பிடித்த முக்கிய சீரியல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

serial TRP
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை வைத்து கணிக்கப்படுவது போல, ஒரு சீரியலின் வெற்றி அதன் TRP ரேட்டிங் பட்டியலை வைத்து தான் தீர்மானிக்க படுகிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட சீரியல் எத்தனை ரசிகர்களால் பார்க்கப்படுகிறது, எவ்வளவு மணிநேரம் பார்க்க படுகிறது என்பதை வைத்தே வெளியிடுகிறார்கள்.
serial TRP
அந்த வகையில் இந்த வருடத்தின் 26-ஆவது வாரத்தில் அர்பன் + ரூரல் குறித்த TRP பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வார TRP பட்டியலில் வழக்கம் போல், சிங்கப்பெண்ணே தொடர் தான், 9.29 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில், எமோஷல் தொடரான கயல் சீரியல் 9.23 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
serial TRP
மூன்றாவது இடத்தில் உள்ளது, கடந்த மாதம் சன் டிவியில் துவங்கப்பட்ட... 'மருமகள்' சீரியல் தான். சில வாரங்களிலேயே டாப் 3 இடத்திற்கு முன்னேறி மற்ற சீரியல்களை தடாலடியாக பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்த தொடர்ந்து 8.12 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பாசமலர் படத்தின் ரீமேக் போலவே ஓடிக்கொண்டிருக்கும் வானத்தை போல தொடர். இந்த சீரியல் இந்த வாரம் 8.00 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
ஐந்தாவது இடத்தில், விஜய் டிவியின் முக்கிய தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான் உள்ளது. வெற்றியின் நக்கல் நையாண்டியோடு... கோமதி பிரியாவின் கலக்கல் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 7.94 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மல்லி தொடர் 6.93 TRP புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடிக்க, சுந்தரி சீரியல் ரேட்டிங்கில் 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு 6.77 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
மேலும் 6.78 TRP புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை விஜய் டிவியின் பாக்கிய லட்சுமி தொடர் பிடிக்க, பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.55 TRP புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை கைப்பற்றி உள்ளது. இந்த வாரம் 10-ஆவது இடத்தை விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் தொடர் 5.59 TRP புள்ளிகளுடன் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.