இந்த மனுஷனுக்கு எல்லா கெட்டப்பும் நல்லாருக்கு.. உணவகம் திறந்த அமீர் - நியூ லுக்கில் வந்த மக்கள் செல்வன்!
Makkal Selvan Vijaysethupathi : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள், பிரபல இயக்குனர் அமீர் அவர்கள் ஆரம்பித்துள்ள புதிய உணவகம் ஒன்றை இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்விற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள்.
Karu Palaniyappan
இயக்குனர் பாலாவின் சேது திரைப்படம் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர் என்கின்ற அமீர் சுல்தான். அதன் பிறகு கடந்த 2002ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அவர் கால்பதித்தார்.
Director Ameer
அதன் பிறகு வெளியான ராம் மற்றும் பருத்திவீரன் ஆகிய இரு திரைப்படங்களும் அவர் இயக்கத்தில் பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு உணவகத்தை நடத்தி வரும் இயக்குனர் அமீர் அவர்கள், தற்போது சென்னை மைலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்னன் சாலையில் "The Law Cafe" என்ற தனது இரண்டாவது உணவகத்தை தற்போது அவர் திறந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actor Dheena
இதன் திறப்பு விழாவிற்கு பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வந்து வாழ்த்து தெரிவித்ததோடு, ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். தற்போது மகாராஜா என்ற படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, மெல்லிய மீசையோடு வித்யாசமான கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.