MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • படகுகளுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் விடிய விடிய மீட்புபணி... மாமன்னன் மாரி செல்வராஜுக்கு குவியும் பாராட்டு

படகுகளுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் விடிய விடிய மீட்புபணி... மாமன்னன் மாரி செல்வராஜுக்கு குவியும் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2023, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
mari selvaraj

mari selvaraj

தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தொடர் கன மழை பெய்ததால் வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ளன. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பெய்ததால் அங்கு மீட்பு நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மீட்பு நடவடிக்கைகளில் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

24
mari selvaraj in rescue work

mari selvaraj in rescue work

இந்த நிலையில் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு விரைந்தார். அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்ததோடு, மீட்பு நடவடிக்கைகளையும் விரைந்து நடத்த அறிவுறுத்தி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
mari selvaraj in flood affected areas

mari selvaraj in flood affected areas

உதயநிதி உடன் இயக்குனர் மாரி செல்வராஜும் உடன் சென்றிருந்தார். அவரும் தென் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை அழைத்துக் கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் உதயநிதி. இதையடுத்து கருங்குளம், முத்தலாங்குறிச்சி பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்த நூற்றுக்கணக்கான மக்களை படகுகள் உதவியுடன் மீட்டு வந்தார் மாரி செல்வராஜ்.

44
mari selvaraj X post

mari selvaraj X post

முடிந்த வரை மக்களை மீட்டு வருவதாக கூறியுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் படகுகள் கூட செல்ல முடியாத நிலையில் 20 கிராமங்கள் உள்ளதாகவும் அவர்களை மீட்பது சற்று சவாலாக இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் தத்தளித்து வருவதாகவும் அவர்களை விரைவில் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இரவு முழுக்க மீட்புப் படையுனருடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், எக்ஸ் தளம் வாயிலாகவும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து வருகிறார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வந்தாச்சு Freeze Task... இந்த வாரம் முழுக்க கண்ணீர் கடலில் மூழ்கப்போகும் பிக்பாஸ் வீடு! எமோஷனல் புரோமோ இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved