ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கு.. லைப் பார்ட்னருடன் லவ்லி கிளிக்ஸ் - வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் Nayan!
தமிழ் திரையுலகில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, பிரபல இயக்குனரும், பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
9 skin
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் காதலிக்க துவங்கினர். அன்று மலர்ந்த காதல் சில ஆண்டுகள் தொடர்ந்தது என்றே கூறலாம்.
Vignesh Shivan
இந்த காதல் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் சென்று முடிந்தது, அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்கிற இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து தற்பொழுது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
Nayanthara
இந்நிலையில் இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது புதிய ஸ்கின் கேர் நிறுவனமான 9 ஸ்கின்ஸ் நிறுவனத்தை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அந்த நிறுவனம் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.
Actress Nayanthara
தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து இந்த புதிய வியாபாரத்தில் நயன்தாரா ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட சில ரொமாண்டிக் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டுள்ளார் .