2-ம் பாகத்துக்காக லியோ படத்தில் லோகேஷ் வைத்துள்ள செம்ம டுவிஸ்ட்... அட இதை யாருமே நோட் பண்ணலயேப்பா!
லியோ படத்தில் இடம்பெற்ற மன்சூர் அலிகான் கேரக்டரை வைத்து லோகேஷ் கனகராஜ் வைத்துள்ள செம்ம டுவிஸ்ட் ஒன்று லீக் ஆகி உள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
Lokesh kanagaraj, vijay
நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. லியோ படம் வசூலை வாரிக்குவித்தாலும் அப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. லியோ படம் பார்த்த பெரும்பாலானோர் முன்வைத்த விமர்சனம் படத்தின் முதல் பாதியை போல் இரண்டாம் பாதி இல்லை என்பது தான். அந்த இரண்டாம் பாதியில் லோகேஷ் ஒரு செம்ம டுவிஸ்ட் ஒன்று வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
Leo
லியோ படத்தில் நடிகர் விஜய் பார்த்திபனாக காஷ்மீரில் வாழும் போது, அவரைத்தேடி வரும் சஞ்சய் தத் கும்பல், அவரை லியோ தாஸ் எனக்கூறுவர். அப்போது விஜய் தான் பார்த்திபன் என்றுகூறி அனுப்பிவிட்டாலும், ஒரு கட்டத்தில் திரிஷாவுக்கே விஜய் பார்த்திபனா இல்லை லியோவா என்கிற சந்தேகம் எழும். அப்போது அவர் கவுதம் மேனன் உதவியுடன் விஜய்யின் நண்பர்களை நேரில் சந்தித்து அவரைப்பற்றி விசாரிப்பார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Lokesh Kanagaraj
அதேபோல் கவுதம் மேனனும் லியோ தாஸ் கேங்கில் இருந்த மன்சூர் அலிகானை சிறையில் சென்று சந்தித்து அவரிடம் லியோ தாஸ் பற்றி கேட்டு தெரிந்துகொள்வார். மன்சூர் அலிகானுக்கு மிகவும் பிடித்த சரக்கோடு தான் அவரை சந்திக்க சென்றிருப்பார் கவுதம் மேனன். மன்சூர் அலிகானும் சரக்கை குடித்துவிட்டு போதையில் தான் லியோ தாஸ் பற்றிய பிளாஷ்பேக் கதையை சொல்லுவார்.
leo movie twist
லியோ படத்தின் இரண்டாம் பாகமே மன்சூர் அலிகான் சொல்லும் பிளாஷ்பேக் கதையை வைத்து தான் நகரும். ஆனால் தற்போது அதில் லோகேஷ் வைத்துள்ள டுவிஸ்ட் ஒன்று தெரியவந்துள்ளது. அதன்படி மன்சூர் அலிகான் சொல்லும் கதை உண்மையல்ல பொய்யாக கூட இருக்கும் என்று அப்படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அதே தகவலை லியோவில் விஜய்யின் நண்பனாக நடித்த ராமகிருஷ்ணாவும் கூறி உள்ளார்.
இதனால் லியோ 2-ம் பாகத்திற்காக தான் லோகேஷ் இப்படி ஒரு டுவிஸ்டை படத்தில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். மறுபுறம் லியோ 2-ம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த தயாரிப்பாளர் லலித் குமார், விஜய்யும், லோகேஷும் மனதுவைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் என கூறி இருக்கிறார். மன்சூர் அலிகானை வைத்து லோகேஷ் கொடுத்துள்ள டுவிஸ்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அஜித் மகளா இது... அச்சு அசல் ஷாலினியை ஜெராக்ஸ் காப்பி எடுத்ததுபோல் இருக்கும் அனோஷ்காவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்