Leo OTT Release: அட்ராசக்க!! 'லியோ' எந்த ஓடிடி தளத்தில்.. எப்போது ரிலீசாகிறது தெரியுமா? தீயாக பரவும் தகவல்!
'லியோ' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல், ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
Leo Movie
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான 'லியோ' திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது.
Leo Box Office Details:
'லியோ' படம் வெளியான முதல் நாளே, 140 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், ஒரு வாரத்தின் முடிவில் 461 கோடி வசூலித்ததாக 'லியோ' படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் இப்படம் 6 நாட்களில் 500 கோடியை எட்டியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்பது, இதன் மூலம் தெரிய வந்தது. அதே போல் மிக குறுகிய நாட்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் 'லியோ' என்கிற சாதனையை படைத்தது.
Malavika: சொட்ட சொட்ட தண்ணீரில் நனைந்து ஜலக்ரீடை பண்ணும் மாளவிகா மோகனன்! சைடு போஸில் சொக்க வைத்த போட்டோஸ்!
Leo collection decreased:
அதே போல் கடந்த இரண்டு நாட்களாக 'லியோ' திரைப்படம் வசூலில் டல் அடிக்க துவங்கி விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே போல் திரையரங்கு உரிமையாளர்கள் சிலரும், லியோ படத்தால் தங்களுக்கு லாபம் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். மேலும், இப்படம் குறித்து வெளியான எதிர்மறையான விமர்சனங்களும், சட்டத்திற்கு புறம்பான வகையில் சில இணையதளங்களில் இப்படம் வெளியானதும் இப்படத்தின் வசூலை அதிகம் பாதித்தது.
Leo Digital rights Bagged by Netflix:
இந்நிலையில் லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல், சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த வகையில் 'லியோ' படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளதால், நவம்பர் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் லியோ படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது கூடிய விரைவில் தெரியும்.
Leo Ott Release date:
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'லியோ' திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், உள்ளிட்ட பல நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் மற்றும் BGM போன்றவை ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D