MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நியூ லுக்கில் லியோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்... அசரவைக்கும் அண்ணாச்சியின் கூல் போட்டோஸ்

நியூ லுக்கில் லியோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்... அசரவைக்கும் அண்ணாச்சியின் கூல் போட்டோஸ்

லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 19 2024, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான லெஜண்ட் சரவணன், தன் கடை விளம்பரங்களில் தானே நடித்து தனி டிரெண்டை உருவாக்கினார். முன்னணி ஹீரோயின்களுடன் விளம்பரங்களில் அவர்போடும் ஆட்டம் வேறலெவலில் வைரல் ஆன நிலையில், அவருக்கு படிப்படியாக ஹீரோவாக நடிக்கும் ஆசையும் வந்தது.

210

அந்த ஆசையை தன் சொந்த செலவிலேயே பூர்த்தி செய்துகொண்டார் அண்ணாச்சி. இதற்காக புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய அவர், மிகப்பெரிய பொருட்செலவில் தி லெஜண்ட் என்கிற திரைப்படத்தை தயாரித்தார்.

310

மேலும் அப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அப்படத்தை ஜேடி, ஜெர்ரி என்கிற இரட்டையர்கள் இயக்கி இருந்தனர். இதனை கடந்த 2022-ம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியிட்டார் அண்ணாச்சி.

410

லெஜண்ட் திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். இதுதவிர ராய் லட்சுமி, யாஷிகா ஆனந்த் போன்ற நடிகைகளும் அப்படத்தில் அண்ணாச்சி உடன் டான்ஸ் ஆடி இருந்தனர்.

510

ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படத்தை பார்த்து பலரும் வியந்தது அதன் பிரம்மாண்டம் தான்.

இதையும் படியுங்கள்... காக்கா - கழுகு கதையால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. ரஜினி, விஜயை சீண்டிய லெஜண்ட் சரவணன்

610

விஜய், ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக பிரம்மாண்டமாக உள்ளதாக பாராட்டுக்களும் கிடைத்தன. மறுபுறம் மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் படமாகவும் இது அமைந்தது.

710

இதனிடையே அடுத்த பட அப்டேட்டை அண்ணாச்சி எப்போது வெளியிடுவார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அப்டேட் கிடைத்தது. அதன்படி துரை செந்தில்குமார் தான் அண்ணாச்சியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

810

அப்படத்திற்கான பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தற்போது அடுத்தபட அப்டேட் உடன் தான் காஷ்மீரில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் அண்ணாச்சி.

910

பனி சூழ்ந்த பகுதியில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள சரவணனின் இந்த போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் லியோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

1010

மறுபுறம் இந்த பதிவில் அன்பானவன் என லெஜண்ட் சரவணன் குறிப்பிட்டு உள்ளதால், அவர் நடிக்கும் அடுத்த பட டைட்டிலாக அது இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. 

இதையும் படியுங்கள்... தளபதி மட்டுமல்ல.. பலரிடம் இருக்கு.. மாஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார் - சொந்தமாக்கி கொண்ட கோலிவுட் செலிபிரிட்டீஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved