தளபதி மட்டுமல்ல.. பலரிடம் இருக்கு.. மாஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார் - சொந்தமாக்கி கொண்ட கோலிவுட் செலிபிரிட்டீஸ்!
Kollywood Celebrities with Rolls Royce : பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் ரோல்ஸ் ராய்ஸ் காரர்கள் வழங்கப்படும். இப்படி பல வதந்திகளை கடந்து தான் 90ஸ் கிட்ஸ்களின் இளமைப் பருவம் இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
Legend Saravanan
உலகத்தில் பல வகையான கார்கள் பல கோடி ரூபாய் மதிப்புகளில் இருந்தாலும் கூட, ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு. அந்த வகையில் பல நடிகர், நடிகைகளும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தற்போது கோலிவுட் உலகின் நாயகனாக மாறியுள்ள லெஜெண்ட் சரவணன் அவர்களிடம் பல ஆடம்பர ரக கார்கள் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் ரக காரிலேயே அவர் இரண்டு மாடல்கள் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு ரஜினி - கமலுக்கு அழைப்பு!
Actress Hansika
தமிழ் சினிமாவில் cute நாயகியாக வளம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நாயகியாக அவர் திகழ்ந்து வருகின்றார். பல கோடிகளுக்கு சொந்தக்காரரான ஹன்சிகா, ஒரு பெரிய கார் விரும்பி. அவரிடமும் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது.
Super Star Rajinikanth
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் ஒன்பதற்கும் மேற்பட்ட உயர் ரக சொகுசு காரர்கள் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இதில் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் அடங்கும். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் பாண்டம் ஆகிய இரு கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Dhanush
தளபதி விஜய் அவர்களிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல பிரபல நடிகர் தனுஷ் அவர்களிடமும் ஒரு rolls-royce கார் உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் தனுஷ் அவர்களிடம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது, கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் இந்த காரை வாங்கி உள்ளார்.