தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு ரஜினி - கமலுக்கு அழைப்பு!
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள 'கலைஞர் 100' விழாவில், கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசியலை தாண்டி, தன்னுடைய எழுத்தாலும், வசனங்களாலும் பல படங்களுக்கு உயிர் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் தந்தை, மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கலைஞருக்கு நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்படடுள்ள நிலையில் , ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தது வருகின்றனர் நிர்வாகிகள். அதன்படி இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்தனர்.
அவர்களின் அழைப்பை மனதார ஏற்றுக்கொண்ட இருவருமே, நிச்சயம் விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். அடுத்தடுத்து மற்ற பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் - நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளுடன், பல வருடங்களுக்கு பின்னர் 24 சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள இப்படி பட்ட ஒரு நிகழ்ச்சி பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D