MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஷ்ணு இயக்கத்தில் The Bull.. மீண்டும் பாலிவுட் உலகில் ரீ-என்ட்ரி - கானுடன் கைகோர்க்கும் கோலிவுட் நாயகி திரிஷா

விஷ்ணு இயக்கத்தில் The Bull.. மீண்டும் பாலிவுட் உலகில் ரீ-என்ட்ரி - கானுடன் கைகோர்க்கும் கோலிவுட் நாயகி திரிஷா

Trisha Bollywood Re-entry : இறுதியாக தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகை திரிஷா, தற்பொழுது மலையாளத்தில் உருவாகி வரும் ராம் மற்றும் ஐடென்டிட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 29 2023, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jodi Movie

Jodi Movie

தமிழ் திரையுலகில் கடந்த 24 ஆண்டுகளாக மிகச் சிறந்த நடிகையாக பயணித்து வருபவர் தான் திரிஷா. 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான "ஜோடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு மௌனம் பேசியதே திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து வெளியான மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை மாற்றும் கில்லி உள்ளிட்ட அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது.

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்

24
Actress Trisha

Actress Trisha

தற்பொழுது முன்னணி நாயகியாக வளம் வரும் திரிஷா தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலருடனும் நாயகியாக பல திரைப்படங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் திரிஷா.

34
Actress Trisha Krishnan

Actress Trisha Krishnan

இந்த 2023 ஆம் ஆண்டு அவருடைய நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான அவருடைய லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு கொடுத்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் பாலிவுட் உலகில் இயக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க தற்பொழுது ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா.

44
Salman Khan

Salman Khan

இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கட்டா மேத்தா என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். ஆகவே சுமார் 13 ஆண்டுகள் கழித்து தற்பொழுது அவர் பாலிவுட் உலகில் Re-Entry கொடுக்கின்றார். இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
சல்மான் கான்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved