மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை காலமானார். இதனால், தேமுதிக தொண்டர்களும் சினிமா உலகத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

நெல்லை வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்களைப் பெற டிச. 30ஆம் தேதி சிறப்பு முகாம்!

Vijay Tribute to VIjayakanth | கனத்த இதயத்தோடு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய்!

இந்நிலையில், நடிகர் விஜய் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதி மரியாதை செலுத்திவிட்டு, விஜயகாந்த் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது எனவும் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் வரை நடைபெறும் என்று தேமுதிக தலைமைக் கழகம் கூறியுள்ளது.

நாளை மாலை 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு அரசியலுக்காக மட்டுமே அதிமுக சிறுபான்மையினர் நலன் குறித்து பேசுகிறது - திருமாவளவன் விமர்சனம்