முகலாய ராணியாகவே மாறிய நித்யா மேனன்.. படக்குனு 350 வருஷம் பின்னால் சென்றது ஏன்? - அவங்களே சொல்லிருக்காங்க!
பெங்களூரில் பிறந்து அங்கேயே தனது கல்லூரி படிப்பை முடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகை நித்யா மேனன். தற்பொழுது மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகின்றார் நித்யா.
Actress Nithya Menen
தமிழில் இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் சித்தார்த் நடிப்பில் வெளியான 180. இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவானது குறிப்பிடத்தக்கது.
Nithya Menen Photos
அதன் பிறகு தமிழில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய புகழை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது என்றால் அது மிகையல்ல. குறிப்பாக மெர்சல் திரைப்படம் இவருக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் என்றே கூறலாம்.
Nithya Menen Latest Photos
இறுதியாக தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்த இவர், தற்பொழுது தனுஷ் தானே இயக்கிய நடித்துவரும் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Menon as Mughal Queen
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகலாய ராஜ்யத்தை சேர்ந்த ராணி ஸிப் உன் நிசா அவர்களுடைய ஓவியத்தை தழுவி அதே கெட்டப்பில் போட்டோ சூட் போன்ற எடுத்துள்ளார். மேலும் reimagine என்பது ஒரு கதாபாத்திரத்துக்கு புதிய தோற்றத்தையும் உணர்வையும் உருவாக்கும் ஒரு முயற்சி என்றும் அதில் தான் பங்கேற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.