பாய் பிரெண்ட் உடன் தகாத உறவு... சின்ன வயசுலயே கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தேன் - ஷகீலா சொன்ன ஷாக்கிங் தகவல்
நடிகை ஷகீலா தான் ஒரு முறை கர்ப்பமானதாகவும், பின்னர் பெற்றோருக்கு தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Shakeela
கவர்ச்சி படங்களில் நடித்து மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ஷகீலா. 90-களில் இவர் நடித்த கவர்ச்சி படங்களுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் மவுசு இருந்தது. குறிப்பாக மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களே ஷகீலாவின் படங்களோடு போட்டிபோட்டோல் தோற்றுவிடுவோம் என பயந்து நடுங்கினர். அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருந்த ஷகீலாவுக்கு திடீரென மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து செட்டில் ஆனார்.
Actress Shakeela
தமிழில் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை ஷகீலாவால் உடைக்க முடியாமலே இருந்தது. அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஷகீலா. அவர் தன்னுடைய சமையல் திறமையை காட்டியதோடு மட்டுமின்றி அவருடைய இமேஜையும் டோட்டலாக மாற்ற உதவியது அந்நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அவரை ஷகீலா அம்மா என்று தான் அனைவரும் அழைக்க தொடங்கினர்.
Shakeela in BiggBoss telugu
அந்த அளவுக்கு அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப்பில் பிரபலங்களை பேட்டி எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வரும் ஷகீலா, அண்மையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அங்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் சிகரெட் புகைத்த வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வந்தன.
இதையும் படியுங்கள்... முதன்முதலில் உடலுறவு கொண்டது இவருடன் தான்... பலான விஷயத்தை பளீச் என போட்டுடைத்த நடிகை ஷகிலா
Shakeela Pregnant
இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் கர்ப்பமானது குறித்து பேசி இருக்கிறார் ஷகீலா. அதில் அவர் கூறியதாவது : “ஒரு முறை கர்ப்பமாகி இருக்கிறேன். ஆண் நண்பருடன் ஏற்பட்ட உறவால் நான் கர்ப்பம் ஆனேன். அவருடன் தற்போதும் தொடர்பில் இருக்கிறேன். அப்போ ரொம்ப சின்ன வயசு என்பதால் தான் கருக்கலைப்பு செய்தேன். அம்மாவும் குழந்தை வேண்டாம்னு சொன்னாங்க. என்னைப்பொறுத்தவரை அது சரியான முடிவுனு தான் சொல்வேன்.
Shakeela interview
நான் கர்ப்பமா இருந்தது எனக்கு தெரியவே தெரியாது. ஏனென்றால் எனக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்னை இருந்தது. அதனால் நானும் கண்டுக்காமல் விட்டுவிட்டேன். என் அம்மா தான் என் வயிற்றை பார்த்து கண்டுபிடித்தார். நான் என்னனு கேட்டதும், ஒன்னுமில்லனு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் அபார்ஷன் பண்ணிட்டாங்க. குழந்தை பெற்றுக்கொள்ள அது சரியான வயது இல்லைங்கிறதுனால தான் அப்படி பண்ணாங்க. அப்படியே பிறந்திருந்தாலும் அது முறையற்றதாக இருந்திருக்கும். அதனால் அதை அபார்ஷன் பண்ணியது சரியான முடிவு தான்” என ஷகீலா கூறினார்.
இதையும் படியுங்கள்... லியோவை ரிஜெக்ட் பண்ணிட்டு விஷால் நடிச்ச படம்! மார்க் ஆண்டனி ஒர்த்தா... ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ