அயலான் பட டீசர்.. அக்டோபர் 6ம் தேதி நாள் குறிச்சாச்சு? பக்கவா பிளான் போட்டு களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறி உள்ள சிவா கார்த்திகேயன் நடிப்பில் வருகின்ற பொங்கல் திருநாளுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan Ayalaan
அதன் பிறகு தொடர்ச்சியாக இந்த படத்தின் பணிகள் தள்ளிப்போன நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த திரைப்படம் மீண்டும் தனது படப்பிடிப்பு பணிகளை துவங்கியது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது இந்த படத்தின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
Director Ravikumar
இந்திய அளவில் முதல் முறையாக சுமார் 4500 விஷுவல் எபெக்ட் ஷார்ட்டுகளை கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 6ம் தேதி இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. பெரிய அளவில் போட்டிகள் இல்லாத நேரத்தில் தனது திரைப்படத்தை மிகவும் கவனமாக கையாண்டு களம் இறக்குகிறார் சிவகார்த்திகேயன்.