அச்சச்சோ... இது என்ன லியோவுக்கு வந்த புது சோதனை! டென்ஷான் செய்த தளபதி ஆடியோ.. புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை!
'லியோ' படம் கர்நாடகாவில் வெளியாகாது என தளபதி குரலில் ஆடியோ ஒன்று வெளியான நிலையில், இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில், செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான 'சித்தா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூர் சென்று இருந்தார். அப்போது சிலர் அத்துமீறி நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் உள்ளே வந்து, காவிரி பிரச்சனையை காரணம் காட்டி, சித்தார்த்தை பேசவிடாமல் தடுத்தனர். அதே போல் தமிழ் படத்திற்கு இங்கு நடத்தப்படும் ப்ரோமோஷன் பணிகள் நடக்கக்கூடாது என்றும், உடனடியாக இதனை நிறுத்துமாறு சத்தம் போட்டனர்.
இதனால் சித்தார்த் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் ,சிவராஜ் குமார் ஆகியோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கூறுவதாக பதிவிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து தளபதி விஜய் குரலில் ஒரு ஆடியோ இன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த ஆடியோவில் 'சித்தா' பட எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விஜய் பேசுவது போன்று யாரோ போலி வீடியோவை வெளியிட்டிருந்தனர். இதில் "லியோ படம் கர்நாடகாவில் வெளியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆடியோ போலியானது என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.