பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27.. ஆமா அவருக்கு ஜோடி யாரு? - கியூட்டான அந்த சீரியல் நடிகை தானாம்!
Actor Karthi 27 : பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நிலையில், தனது அடுத்த படங்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்து வருகிறார் அவர்.
Japan Movie
அந்த வகையில் அவருடைய 27வது திரைப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் கார்த்திக் தமிழ் திரை உலகில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளம்வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இருப்பினும் இந்த தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
Karthi 27
நல்ல நடிப்பை கார்த்தி வெளிப்படுத்தியும், ஜப்பான் படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறாத நிலையில், மீண்டும் ஒரு நல்ல கம் பேக் கொடுக்க வினோத் போன்ற பல முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் நடிகர் கார்த்தி. அந்த வகையில் 96 திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தனது 27வது திரைப்படத்தை அவர் நடிக்க உள்ளதாக அண்மையில் சில தகவல்கள் வெளியானது.
Serial Actress Swathi
இருப்பினும் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள கதையின் நாயகி குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சின்னத்திரை நாடகமான ஈரமான ரோஜாவே 2 தொடரில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி தான் கார்த்தியின் நாயகியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.