MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற கேகேஆர் – 3ஆவது முறை சாம்பியனாகுமா?

4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற கேகேஆர் – 3ஆவது முறை சாம்பியனாகுமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 21 2024, 11:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

அகமதாபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஹெட் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 3 ரன்னில் வெளியேறினார். நிதிஷ் ரெட்டி 9 ரன்னிலும் ஷாபாஸ் அகமது 0 ரன்னிலும் வெளியேறினர்.

310
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

அடுத்து ராகுல் திரிபாதி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். எனினும் கிளாசென் 32 ரன்களில் வெளியேறவே, ராகுல் திரிபாதி அரைசதம் அடித்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

410
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

சன்வீர் சிங் 0 ரன்னிலும், அப்துல் சமாத் 16 ரன்னிலும், புவனேஷ்வர் குமார் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக பேட் கம்மின்ஸ் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

510
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

610
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குர்பாஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க சுனில் நரைன் 21 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

710
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் தவறவிட்டனர். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 51 ரன்கள் எடுக்க, மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

810
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

கொல்கத்தா 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2012, 2014, 2021 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

910
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இதில், 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா டிராபியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாட இருக்கிறது. 

1010
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1

இதற்கு முன்னதாக அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்ற அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (10 முறை) முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் (6) 2ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 முறை) 3ஆவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (3 முறை) 4ஆவது இடத்திலும் உள்ளன. 2ஆவது தகுதிச் சுற்று போட்டி மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் சென்னையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அகமதாபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மிட்செல் ஸ்டார்க்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சுனில் நரைன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved