MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

எடப்பாடி பழனிசாமி குறித்து பேச விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 23 2024, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது. அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க;-  டெல்லி முதல் தமிழ்நாடு வரை... வதந்தி பரப்புவதில் பா.ஜ.க.வில் யாரும் விதிவிலக்கு கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

24
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த வழக்கு செப்டம்பர் 21ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளது.  இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும். ஆகையால் கொடநாடு பற்றி பேசவோ, அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும்,  உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். 

34
Chennai high court and eps

Chennai high court and eps

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.

இதையும் படிங்க;- இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! சாட்டையை சுழற்றிய கோர்ட்

44
Chennai high court

Chennai high court

கொடநாடு சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொது நலன் அடிப்படையில் கருத்து தெரிவித்தேன். எனவே, எனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனுவில் கோரியிருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
சென்னை உயர் நீதிமன்றம்
திமுக
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved