MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னை கோட்டையில் சாம்பியனான KKR – கவுதம் காம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் அண்ட் கோவிற்கு குவியும் பாராட்டு!

சென்னை கோட்டையில் சாம்பியனான KKR – கவுதம் காம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் அண்ட் கோவிற்கு குவியும் பாராட்டு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 26 2024, 10:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Mitchell Starc

Mitchell Starc

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தில் அபிஷேக் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழ்ந்தார். வைபவ் அரோரா வீசிய 2ஆவது ஓவரில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் முறையில் வெளியேறினார்.

310
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இந்த சீசனில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் முறையே 0(1), 0(2), 34(28), 0(1) என்று ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதையடுத்து ஸ்டார்க் வீசிய 5.2ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி 9 ரன்களில் நடையை கட்டினார். 5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

410
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இவரைத் தொடர்ந்து இன்று தனது 21ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். அவர், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக எய்டன் மார்க்ரம் 23 பந்துகளில் 3 பவுண்டரி அடித்த நிலையில் ஆண்ட்ரே ரஸல் பந்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

510
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து ஹென்ரிச் கிளாசென் மற்றும் ஷாபாஸ் அகமது இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால், ஷாபாஸ் அகமது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் 8 ரன்னில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் பிளேயராக வந்த அப்துல் சமாத் 4 ரன்களில் நடையை கட்டினார். பெரிதும் நம்பப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.

610
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

அப்போது ஹைதராபாத் அணியானது 14.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் சுனில் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக பேட் கம்மின்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்கவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

710
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இதன் மூலமாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் குறைவான ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் 125 ரன்கள் மட்டுமே குறைவான ஸ்கோராக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் இறுதிப் போட்டியில் 33 இன்னிங்ஸ்களில் ஒரு அணியிலுள்ள எந்த வீரரும் 25 ரன்களை கூட எட்டவில்லை. பேட் கம்மின்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.

810
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

910
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

1010
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இறுதியாக கேகேஆர் 10.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது. தற்போது முதல் முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டிராபியை கைப்பற்றியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கௌதம் கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மிட்செல் ஸ்டார்க்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved