தீபாவுக்கு எதிராக சினேகா செய்த சதி.. அபிராமியிடம் இருந்து தப்பிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு போட வேண்டிய நேரத்தை சொல்லி அந்த சமயம் மூன்று மருமகள்களும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai deepam
அதாவது மீனாட்சி, தீபாவிடம் விஷயத்தை சொல்ல அவ நான் லீவ் சொல்லிடுறேன் என்று சொல்கிறாள். மீனாட்சி கார்த்திக்கு போன் பண்ணி சொல்லு என்று சொல்ல இவள் அவர் நம்பர் ரீச் ஆகல, நான் ஆபிசில் சொல்லிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறாள்.
Karthigai deepam
ஆபிசில் லீவ் கேட்க சினேகா நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, கார்த்தியோட பி.ஏ வாக நீங்க தான் அந்த வேலையை செய்து முடிக்கணும், ரெண்டு மணி நேரம் தான் அந்த வேலை. அதன் பிறகு நீங்க வீட்டுக்கு போய்டுங்க என்று சொல்கிறாள். இதனால் தீபாவும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவிக்கிறாள்.
karthigai deepam
அடுத்து மீனாட்சியிடம் விஷயத்தை சொல்ல அவள் சரியான டைம்க்கு இங்க வந்துடு, இல்லனா அபிராமி அத்தை பெரிய பிரச்சனை பண்ணிடுவாங்க என்று சொல்ல தீபா வந்து விடுவதாக சொல்லி வேலைக்கு கிளம்பி செல்கிறாள். வேறொரு ஆபிசில் பைலை கொடுக்க சொல்லி ஸ்நேகா வெளியே அனுப்ப தீபாவும் கிளம்பி வருகிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Karthigai deepam
பிறகு சினேகா இந்த ஆபிஸ்க்கு போன் செய்து தீபா இன்னைக்கு முழுக்க அங்க தான் இருக்கணும், அவளை காக்க வையுங்கள் என்று சதி திட்டம் தீட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.