மீண்டும்... மீண்டுமா! ஜாமின் கேட்டு நீதிமன்ற கதவை தட்டிய டிடிஎப் வாசனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
TTF Vasan
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் கடந்த வாரம் விபத்தில் சிக்கினார். மகாராஸ்ட்ரா செல்வதற்காக தன்னுடைய ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஹாயாபுசா பைக்கில் கிளம்பிய டிடிஎப் வாசன், காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது பைக்கில் வீலிங் செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறிய வாசன், அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் வாசனின் ஹாயாபுசா பைக் சுக்குநூறாக உடைந்தது.
TTF Vasan Accident
ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வசதிகளுடன் கூடய ஹெல்மெட் அணிந்திருந்ததாலும், கவச உடைகள் முறையாக அணிந்திருந்ததாலும் லேசான காயங்களுடன் தப்பித்தார் வாசன். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போட்டிருந்த வாசனை, பாலுசெட்டி சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
TTF Vasan case
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாசனுக்கு கையில் வலி அதிகமானதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அவர் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் நீதிபதி, வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
youtuber TTF Vasan
இந்த நிலையில், வாசன் தனக்கு ஜாமின் கோரி மீண்டு நீதிமன்ற கதவை தட்டி உள்ளார். இந்த முறையும் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவர் வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டது. தொடர்ந்து ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் டிடிஎப் வாசனை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் வாசனின் ரசிகர்களும் அப்செட் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நீங்க ஷூட்டிங் ஆரம்பிங்க; நாங்க பூஜைய போடுறோம்! ‘விடாமுயற்சி’யை விரட்டி வரும் ‘தளபதி 68’.. 2 இன் 1 அப்டேட் இதோ