நீங்க ஷூட்டிங் ஆரம்பிங்க; நாங்க பூஜைய போடுறோம்! ‘விடாமுயற்சி’யை விரட்டி வரும் ‘தளபதி 68’.. 2 இன் 1 அப்டேட் இதோ
அஜித் நடிக்கும் விடாமுயற்சி பட ஷூட்டிங்கும், விஜய்யின் தளபதி 68 படத்திற்கான பணிகளும் போட்டி போட்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thalapathy 68 vs Vidamuyarchi
அஜித்தும், விஜய்யும் தமிழ் சினிமாவில் சமகாலத்தில் அறிமுகமாகி, தங்களுக்கென தனி ரசிகர்படையையே உருவாக்கி வைத்துள்ளனர். விஜய், அஜித் படங்கள் என்றாலே தியேட்டர்கள் திருவிழாக்கோலமாக மாறும், அந்த அளவுக்கு மாஸான நடிகர்களாக இருவரும் வலம் வருகின்றனர். ரியல் லைஃபில் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், சினிமாவை பொறுத்தவரை போட்டியாளர்கள் தான்.
vijay, ajith
அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு போட்டிபோட்டு ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதையடுத்து விஜய் நடித்த லியோ படமும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ஒன்றாக தொடங்கப்படும் என கூறப்பட்டது. இதனால் மீண்டும் விஜய் - அஜித் படங்கள் மோத வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay ajith movie clash
லியோ படம் திட்டமிட்டபடி ஷூட்டிங்கையே முடித்து இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது. ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படமோ இன்னும் ஷூட்டிங்கே தொடங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி ஒருவழியாக முடிவாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 4-ந் தேதி அபுதாபியில் தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
vijay ajith movie update
விடாமுயற்சிக்கு முன்னரே நடிகர் விஜய்யும் தன்னுடைய அடுத்த படமான தளபதி 68 படத்திற்கு பூஜை போட உள்ளாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு வருகிற அக்டோபர் 2-ந் தேதி பூஜை போடப்பட உள்ளதாம். வழக்கமாக ரிலீஸ் சமயத்தில் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் படங்கள் தற்போது ஆரம்பத்திலேயே போட்டிபோட்டு தொடங்கப்பட உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய்யின் லியோ LCU படமா, இல்லையா? உடைந்தது சஸ்பென்ஸ்.. அப்ப தலைவர் 171..?