Bigg Boss Eviction: ஜஸ்ட் மிஸ்.. தப்பிய நிக்சன்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், மக்கள் மத்தியில் குறைவான வாக்களுடன் வெளியேற உள்ள அந்த போட்டியாளர் யார்? என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், தற்போது 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் முதல் நாளை 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் இருந்து முதல் வாரமே அனன்யா ராவ், மற்றும் பவா செல்லதுரை ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், அடுத்தடுத்து விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, ஆர் ஜே பிராவோ, அன்னபாரதி, ஆகிய ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 28-ஆவது நாளில் உள்ளே நுழைந்து, குரூப் குரூப்பாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில், பிரச்சனைகளை பற்றி எரிய விட்டனர்.
BB Tamil 7
தற்போது வைல்ட் கார்டு போட்டியாளர்களில் அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகிய இருவர் மட்டுமே நிலைத்து விளையாடி வருகின்றனர். அதேபோல் முதல் ஓரிரு வாரத்திலேயே வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விசித்ரா, கண்டிப்பாக பைனலுக்குள் நுழைவார் என தெரிகிறது. மேலும் விஷ்ணு, மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், மணி, ரவீனா, ரீ-என்ட்ரி போட்டியாளரான விஜய் வர்மா ஆகியோர் செம டஃப் கொடுத்து விளையாடி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். கடந்த வாரம் மழை காரணமாக மக்கள் ஓட்டு போட முடியாது என்கிற காரணத்தால் பிக்பாஸில் எலிமினேஷன் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் மிட் வீக் எலிமினேஷன் என்கிற புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தி, அனன்யா ராவை வெளியேற்றினார் பிக்பாஸ்.
இதைத் தொடர்ந்து இந்த வாரம் குறைந்த வாக்குகளுடன் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காரணம் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சிக்கி உள்ள அர்ச்சனா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு, தினேஷ், ஆகிய ஐந்து பேருமே மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த வார எலிமினேஷன் குறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்... மிகவும் குறைவான வாக்குகள் அடிப்படையில் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்கேப் ஆகியுள்ளார் நிக்சன்.
BB Tamil 7
கூல் சுரேஷ், கடந்த இரண்டு வாரங்களாகவே குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்கிற ஏக்கத்தில் தவித்து வந்தார். அதே போல் பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இது போன்ற செயல்களால் இவருக்கு வாக்குகள் குறைந்து... இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த தகவல் கூல் சுரேஷ் ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும்... அவரு செம்ம ஹாப்பி பாஸ்.
களைகட்டிய பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம்! நேரில் வந்து வாழ்த்திய ‘லெஜண்ட்’ சரவணன்!