- Home
- Gallery
- Celebrity Couple Divorce: திருமணமான ஐந்தே வருடத்தில்... பிரபல இயக்குனரை விவாகரத்து செய்த விஜய் பட பிரபலம்!
Celebrity Couple Divorce: திருமணமான ஐந்தே வருடத்தில்... பிரபல இயக்குனரை விவாகரத்து செய்த விஜய் பட பிரபலம்!
பிரபல ஸ்டைலிஸ்ட்டான ஜாய் கிரிசில்டா தன்னுடைய கணவரும், பிரபல இயக்குனருமான ஜே ஜே பெட்ரிக்கை விவாகரத்து செய்து விட்டதாக, சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சிலர், திருமணத்திற்கு பிறகு காதலிக்க மறந்து விடுவதாக பொதுவாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. இது தான் திருமணமான சில வருடங்களிலேயே, அவர்கள் விவாகரத்தை நாட காரணமாகவும் அமைகிறது.
அந்தவகையில், ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கிய இயக்குனர், ஜே ஜே பெட்ரிக்கின் மனைவி, ஜாய் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த தகவலை அறிவித்துள்ளார்.
ஜாய்யும், பெட்ட்ரிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், ஏராளமான பிரபலங்கள் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்களே ஆகும் நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக ஜாய் தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிக்கிறோம். எனக்கு எப்போதும் போல் நண்பர்கள் மற்றும் என் உறவினர்கள் ஆதரவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். அதேபோல் விவாகரத்து என்பது தோல்வி அல்ல என்றும், அது அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஜாய் தளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் விஜய்க்கு ஸ்டைலிஸ்ட்டாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் பணி பாராட்டை பெற்றது. இதைத்தொடர்ந்து ராஜ தந்திரம், டார்லிங், மிருதன், வேலைக்காரன், உள்குத்து, கணிதன், உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார்.
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றாமல் ஒதுங்கிய, ஃபேஷன் டிசைனிங் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் இனி தன்னுடைய ஸ்டைலிஸ்ட் பணிகளிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.