MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கவுதம் மேனன் இயக்கிய ஜோஸ்வா பட ஹீரோயின்... பிக்பாஸ் டைட்டில் வின்னரின் மனைவியா? 2 குழந்தைங்க வேற இருக்காமே!

கவுதம் மேனன் இயக்கிய ஜோஸ்வா பட ஹீரோயின்... பிக்பாஸ் டைட்டில் வின்னரின் மனைவியா? 2 குழந்தைங்க வேற இருக்காமே!

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த மார்ச் 1-ந் தேதி திரைக்கு வந்த ஜோஸ்வா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ராஹே பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
joshua imai pol kaakha

joshua imai pol kaakha

தமிழ் திரையுலகில் பல்வேறு கிளாசிக் ஹிட் ரொமாண்டிக் படங்களை கொடுத்தவர் கவுதம் மேனன். அவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் ஜோஸ்வா இமை போல் காக்க. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் வருண் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஹே நடித்துள்ள இப்படம் கடந்த மார்ச் 1-ந் தேதி திரைக்கு வந்தது. இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்டு உள்ளது.

24
Arav wife raahei

Arav wife raahei

ஜோஸ்வா படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல வருடங்களாக இப்படம் கிடப்பில் இருந்தது. தற்போது நீண்ட காத்திருப்புக்கு பின் திரையரங்கில் ரிலீஸ் ஆகி உள்ள ஜோஸ்வா திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் திரைக்கதை சொதப்பலாக உள்ளதால் அது பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... அறிவிப்புக்கு பின் கப்சிப்னு ஆன தமிழக வெற்றிக் கழகம்... விஜய் கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்ன?

34
Actress Raahei

Actress Raahei

இந்நிலையில், ஜோஸ்வா பட ஹீரோயின் ராஹே பற்றிய ஒரு ஆச்சர்ய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படத்தின் நாயகி வேறுயாருமில்லை, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ்வின் மனைவி தான். அவர் நடித்த முதல் படம் இதுதான். இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஹே. அதன் ஷூட்டிங் முடிந்ததும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

44
BiggBoss Arav and raahei with their kids

BiggBoss Arav and raahei with their kids

ஆரவ் - ராஹே ஜோடியின் திருமணம் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நடிகை ராஹே ஜோஸ்வா படத்தில் நடித்து முடித்தபோது அவருக்கு திருமணமாகவில்லை. ஆனால் தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பின்னர் தான் அப்படமே ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினிகாந்த்... சவுரவ் கங்குலியின் பயோபிக்கில் சூப்பர்ஸ்டார்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved